சுதந்திர, செழுமையான ஆசியா : ஜப்பான் பிரதமர் விருப்பம்!

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (15:47 IST)
இந்தியாவும், ஜப்பானும் பொருளாதாரத்தில் இருந்து பாதுகாப்பு வரை அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்தி சுதந்திரமும், செழுமையும் மிக்க விரிவான ஆசியாவை உருவாக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறினார்!

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். இந்தியாவும், ஜப்பானும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அடுத்த 3 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்தலாம் என்று கூறினார்.

இந்தியாவின் உள்கட்டமைப்பில், குறிப்பாக டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கட்டா இடையே தனித்த சரக்கு போக்குவரத்து சாலையை உருவாக்குவதில் ஜப்பான் ஒத்துழைப்பு தர விரும்புவதாகக் கூறினார்.

எல்லைகளைக் கடந்து ஒரு புதிய வடிவத்தில் விரிவான ஆசியாவை உருவாக்கும் திட்டத்தை யதார்த்தமாக்க இந்தியா உதவிட வேண்டும் என்று அபே கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்