மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விடுத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை அடுத்து அவர்கள் மேற்கொள்வதாக இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சம்பள உயர்வு, இடைக்கால நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து மத்திய அரசின் பெட்ரோலியத் துறை சார்பில் அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. ஒவ்வொரு அதிகாரிக்கும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை இடைக்கால நிவாரணம் வழங்க சம்மதம் தெரிவித்தனர். வேறு பல கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.
இதையடுத்து வேலை நிறுத்தத்தை திரும்ப பெறப் போவதாக அதிகாரிகள் சங்க தலைவர் சஞ்சய்கோயல் அறிவித்தார்.