எஸ்.எம்.எஸில் ரெயில் டிக்கெட் முன்பதிவு

Webdunia

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (11:07 IST)
செல்பேசியில் இருந்து அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். அனுப்பி ரெயில் பயணச் சீட்டு முன்பதிவு (ஐ-டிக்கெட்) செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் வீட்டிற்கே டிக்கெட் அனுப்பி வைக்கப்படுகிறது.

இணைய தளம் மூலம் ரயில் பயணச் சீட்டமுன்பதிவு செய்யும் முறையை அடுத்து தற்போது செல்பேசி எஸ்.எம்.எஸ். செய்து ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கடந்த சில வாரங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரிலையன்ஸ் செல்போன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த முறையில் ரெயில் பயணசசீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை பெறுவதற்கு விரும்புபவர்கள் இன்டர்நெட்டில் www.irctc.co.in என்ற முகவரியில் செல்பேசி எண் உள்ளிட்ட தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்துவிடவேண்டும். பதிவானபின் நமக்கு ரகசிய எண் ஒன்று கொடுக்கப்படும். அதன்பின்னர் எத்தனை முறைவேண்டுமானாலும் செல்பேசி மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின்படி தமிழகத்தில் தற்போது ரிலையன்ஸ் செல்பேசி மூலமே ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகள் 48 மணி நேரத்தில் கொரியர் மூலம் டெல்லியில் இருந்து வீட்டிற்கே அனுப்பிவைக்கப்படும். இந்த சேவைக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

ிரைவில் அனைத்து செல்போன்களிலும் இந்த வசதி செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்