7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (11:30 IST)
கர்நாடக, சிக்கிம் ஆளுநர்களின் பதவிக் காலம் முடிவடைவதாலும், சில மாநிலங்களுக்கான ஆளுநர்கள் இல்லாததாலும் 7 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பிறப்பித்துள்ள உத்தரவில், மூத்த காங்கிரஸ் தலைவரும், உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சருமான என்.டி.திவாரி, ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்படுவார்.

ஒரிசா மாநில ஆளுநரராமேஷ்வர் தாக்கூர், கர்நாடக மாநில ஆளுநராக மாற்றப்படுவார். இதுவரை கர்நாடக ஆளுநராக பதவி வகித்தவந்த டி.என்.சதுர்வேதியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதர் சந்திரகாந்த் பண்டாரே, ஒரிசா மாநில புதிய ஆளுநராக பதவி ஏற்பார். பிரதீபா பட்டீல் குடியரசுத் தலைவரானதால் காலியான ராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவிக்கு, இதுவரை அருணாச்சல பிரதேச ஆளுநராக இருந்தவந்த சைலேந்திர குமார் சிங் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

நாகலாந்து ஆளுநர் கே.சங்கரநாராயணன், அருணாச்சல பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். உத்தரகாண்ட் ஆளுநரசுதர்சன் அகர்வால், சிக்கிம் ஆளுநராக மாற்றப்பட்டு இருக்கிறார். சிக்கிம் ஆளுநராக இருந்த வி.ராமாராவின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.
மேகாலயா மாநில கவர்னர் பி.எல்.ஜோஷி, உத்தரகாண்ட் மாநில புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்