இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று கூறிவிட்ட இடதுசாரிகள், தற்போதைய நிலை குறித்து தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நாளை கூடி ஆலோசனை நடத்தவுள்ளது!
பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பிரகாஷ் காரத்தும், சீதாராம் யச்சூரியும், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை ஏற்க முடியாது என்றும், அது தொடர்பாக அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்றும் கூறியிருந்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டால் உருவாகியுள்ள சிக்கல் குறித்து இன்று கூடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.
இக்கூட்டத்தையடுத்து, மத்திய அரசு எடுக்கும் நிலைப்பாடு குறித்து, இடதுசாரி கூடடணித் தலைவர்கள் கூட்டம் நாளை கூடி விவாதிக்கவுள்ளது.