பிரதமருக்கு எதிர்ப்பு : மாநிலங்களவை நாளை வரை தள்ளிவைப்பு

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (13:35 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் குறித்து விளக்கிய பிரதமர், அவைக்கு தவறான தகவலை அளித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மாநிலங்களவை நாளை வரை தள்ளிவைக்கப்பட்டது.

இன்று காலை அவை கூடியதுமே பாஜக, சமாஜ்வாடி, அஇஅதிமுக உறுப்பினர்கள் பிரதமரை கண்டித்து முழக்கமிட்டதன் காரணமாக 45 நிமிடங்கள் தள்ளிவைக்கப்பட்டது.

நண்பகல் 12 மணிக்கு அவை கூடியபோது சமாஜ்வாடி, அஇஅதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி முழக்கமிட்டனர். அவர்களோடு பாஜக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் முழக்கமிட்டனர்.

உறுப்பினர்கள் அமைதி காக்க கூறி அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான மொஹம்மது அன்சாரி விடுத்த வேண்டுகோள்கள பலனளிக்கவில்லை.

இதையடுத்து அவை நடவடிக்கைகளை நாளை காலை வரை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்