அசாம் படுகொலை : பிரதமர் கண்டனம்

Webdunia

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2007 (11:43 IST)
அசாமில் ஹிந்தி பேசும் மக்கள் 16 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அசாமில் கர்பி ஆங்லாங் மாவத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த இந்தி பேசும் மக்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி பலியாயினர்.

மற்றொரு சம்பவத்தில் சுகான் மாவட்டத்தில் ஹிந்தி பேசும் மக்கள் மீது தீவிரவாதிகள் கையெறி கொண்டுகளை வீசி தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஹிந்தி பேசும் மக்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநில அரசுடன் தொடர் கொண்டு, சம்பவம் குறித்தும், தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்தும் கேட்டறிந்ததாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் அசாமில் உள்ள பீகார் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்