குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி பதவியேற்றார்!

Webdunia

சனி, 11 ஆகஸ்ட் 2007 (20:23 IST)
இந்தியாவின் 13வது குடியரசு துணைத் தலைவராக மொஹம்மது ஹமீத் அன்சாரி பதவியேற்றார்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் இன்று மாலை நடந்த விழாவில் ஹமீத் அன்சாரிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவாத், எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்