குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரி கூட்டணி வேட்பாளரான ஹமித் அன்சாரி கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்!
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடந்த தேர்தலில் 762 வாக்குகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இன்று மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில், ஹமித் அன்சாரி 455 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா 222 வாக்குகளும், 3ம் அணியின் சார்பாக போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் ரஷீத் மசூத் 75 வாக்குகளும் பெற்றுள்ளனர். 10 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.