அணுசக்தி ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் : இடது சாரிகள்

Webdunia

வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (17:33 IST)
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததின் விவரங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என இடது சாரிகள் வலியுறுத்தி உள்ளன.

123 ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட பிறகு அதனை ரத்து செய்வதற்கு அரசமைப்பு சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் இல்லை என்தால், அதனை இறுதி செய்வதற்கு முன்பு தேவையான மாற்றங்களை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹைட் சட்டமானது இந்தியாவின் அயலுறவுக் கொள்கைக்கும், சட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், இந்தியாவின் சுதந்திரமான அயலுறவுக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாத உறுதியளிப்பை தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறினார்.

இதனால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை நீங்கள் விலக்கிக் கொள்வீர்களாக என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்ட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்