இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது

Webdunia

புதன், 8 ஆகஸ்ட் 2007 (16:02 IST)
2005 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத் துறையில் சிறப்பான சேவை ஆற்றியவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2005 ஆன் ஆண்டிற்கான இந்த விருது ஷியாம் பெனகலுக்கு வழங்கப்படுகிறது.

இந்தாண்டு இறுதியில் இதற்கான விழாவில் குடியரசுத் தலைவர், ஷியாம் பெனகலுக்கு விருதினையும், ரூ 2,00,000 பரிசுத் தொகையும் வழங்குகிறார்.

1934 ஆன் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஷியால் பெனெகலுக்கு, சிறு வயதில் இருந்தே திரைப்படத் துறையில் அதிக ஈடுபாடு இருந்தது. இவரது முதல் படமான அன்குர் மிகவும் பரப்பாக பேசப்பட்டது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இவருடைய படங்கள் பெரும்பாலும் சமூகம், கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பிரதிபலிப்பவையாக இருக்கும். திரைப்படத் துறையில் மட்டுமின்றி பல்வேறு சமூக நல சேவைகளிலும் அதிக அளவு ஈடுபாடு கொண்டவர் ஷியால் பெனெகல்.

இவர் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்