அமைப்பு சாரா தொழிலாளர்கள்: நாடு தழுவிய போராட்டம்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி சி.ஐ.டி.தொழிற் சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நாளை மறுநாள் கூட உள்ள நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் அமைப்பு சார தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் இயற்றுவது, சம்பளம் முறைப்படுத்துவ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இதையொட்டி, சென்னை குறழகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் போது தங்கள் கோரிகளை வலியுறித்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

கேரளாவில் வேலை நிறுத்தப்போராட்டத்தால் அங்கு மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் பெரும்பாலனா மாவட்டங்களில் உள்ள கடைகள் இன்று மூடப்பட்டிருந்தன. தனியா பேருந்துகள், லாரிகள் இயங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்