இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்தத்தை ஆளும் கூட்டணிக்கு ஆதரவளித்துவரும் இடதுசாரி கூடட்ணி நிராகரித்துள்ளது!
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இடதுசாரி கூட்டணிக் கட்சிகளின் முக்கியக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் ராணுவ ரீதியிலான கூட்டணியில் இந்தியாவையும் கூட்டப் பார்க்கிறது. எனவே, இதனை நாங்கள் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 123 ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்கும் போது, சர்வதேச அளவில் மத்திய அரசு கையெழுத்திடும் அனைத்து ஒப்பந்தங்களும் நாடாளுமன்றத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்பதனை கட்டாயமாக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவர இடது கூட்டணி வலியுறுத்தும் என்றும் காரத் கூறியுள்ளார்.