27 விழுக்காடு இடஒதுக்கீடு : பாலகிருஷ்ணன் தலைமையில் அமர்வு அமைப்பு

Webdunia

சனி, 4 ஆகஸ்ட் 2007 (11:07 IST)
மத்திய அரசுக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணை வருகிற 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படிருந்தது. தற்போது, இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள ஐந்து நீதிபதிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் அர்சித் பசாயத், தன்வீர் பண்டாரி, இரவீந்திரன், தாக்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் நீதிபதி அர்சித் பசாயத் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்தவர் என்பதும், 27 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியவர் என்பதும் குறிப்பிடதக்கது.

நீதிபதி பசாயத் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ள இடைக்கால தடை இன்னமும் அமலில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்