அசாமில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Webdunia

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (11:28 IST)
அசாம், பீகார் , உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அசாமில் மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அசாமில் பெய்து வரும் கன மழையினால் அங்குள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் வரவழைக்க்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் கடந்த 18 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ரயில், பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பீகார் மாவட்டத்தில் 16 மாவட்டங்களில் 83 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு இதுவரை 41 பேர் பலியாகி இருப்பதாகவும், அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திரபிரதேசத்தில் பெய்து வரும் கன மழையால் கங்கை உள்பட பல நதிகள் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. மீட்பு, நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ராணுவம் வரவழைக்கப்படுள்ளது. டெல்லியில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்