உத்திரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 35 பேர் பலி

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (16:32 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 35 பேர் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

உத்திரபிரதேச மாநிலம் மஹாராஜ்காஞ் மாவடத்தில் உள்ள ரோஹின் ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. படகில் 90 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு எடுத்தது.

இதில் படகு நிலை குலைந்து ஆற்றில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும், காவல் துறையினர் இரண்டு விசைப்படகுகளில் விரைந்து சென்று மீட்டுப்பணியில் ஈடுபட்டனர். இதில் 55 பேர் மீட்கப்பட்டனர்.

35 பேர் ஆற்றில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 7 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்