காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவடத்தில் உள்ள ரட்னிபோரா என்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் கூட்டு ரோந்து பணியில் இன்று காலை ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஹிஷ்புல் முஜஹிதீன் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஏ.கே.ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைபற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.