அணுசக்தி ஒப்பந்தம் : பிரதமர் - வாஜ்பாய் சந்திப்பு

Webdunia

திங்கள், 26 நவம்பர் 2007 (20:00 IST)
இந்தியா அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம், பிரதமர் மன்மோகன் சிங் விளக்கினார்.

அணு சக்தி ஒத்துழைப்பிற்கான 123 ஒப்பந்த வரைவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இது குறித்து அனைத்து கட்சி தலைவர்களிடமும் பிரதமர் நேரில் விளக்குவார் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

அதற்கினங்க, இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்தொற்றுமையை அவரிடம் பிரதமர் விளக்கி கூறினார்.

இந்த சந்திப்பின் போது மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், 123 ஒப்பந்தம் தொடர்பான முழு விவரம் தெரிய வந்த பிறகே அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்