மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி பதவி ஏற்பு

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (16:29 IST)
மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி, திருச்சி சிவா, டி, ராஜா ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக வில் இருந்து முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கமïனிஸ்டு கட்சி சார்பில் டி. ராஜா ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகனும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிமுக சார்பில் மைத்ரேயன், இளவரசன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் கனிமொழி, சிவா, டி. ராஜா ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டனர்.

மாநிலங்களவை துணை தலைவர் ரகுமான் கான் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன், முதலமைச்சர் கருணாநிதி, துணைவியார் ராஜாத்தி அம்மாள், மத்திய மந்திரிகள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், டி.ஆர். பாலு, தாஸ் முன்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்