குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் பதவி ஏற்றார்!

Webdunia

புதன், 25 ஜூலை 2007 (20:59 IST)
PTI PhotoPTI
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக 74 வயதான பிரதீபா பாட்டீல் சற்றுமுன் பதவியேற்றார்!

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவியேற்பு உறுதிமொழியைப் படிக்க, அதனை திருப்பிக் கூறி பதவியேற்றார் பிரதீபா பாட்டீல்.

புதிய குடியரசுத் தவைராக பிரதீபா பாட்டீல் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும், அதுவரை தான் அமர்ந்திருந்த இருக்கையில் பிரதீபா பாட்டீலை அமரச் செய்தார் அப்பதவியில் இருந்து விடைபெற்ற டாக்டர் அப்துல் கலாம்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கை தட்டி பாராட்ட, குடியரசுத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார் பிரதீபா பாட்டீல்.

வெப்துனியாவைப் படிக்கவும்