உத்திரபிரதேசத்தில் 6 காவல்கள் சுட்டுக் கொலை

Webdunia

திங்கள், 23 ஜூலை 2007 (12:21 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் காவல் துறையினருக்கும், கொள்ளை கும்பலுக்கும் நடந்த துப்பாகிச் சண்டையில் 6 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த சிறப்பு காவல் படை அமைப்பட்டுள்ளது. இந்நிலையில் சிட்ரகாட் மாவட்டத்தில் உள்ள குசும்கியா மலைப் பகுதியில் தோகியா தலைமையிலான திருட்டுக் கும்பல் பதுங்கி இருப்பதாக சிறப்பு காவல் படைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியை சிறப்பு காவல் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளை கும்பலுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் தோகியா மற்றும் அவனது கூட்டாளிகள் தப்பி விட்டதாகவும், துப்பாகிச் சண்டையில் 6 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்