போலி என்கவுண்டர்: 13 காவலர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்

Webdunia

திங்கள், 16 ஜூலை 2007 (17:28 IST)
குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் 13 காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டரில் ஷொராபுதின் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி ஷொராபுதின் சகோதரர் குஜராத் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் தலைமை ஆய்வாளர் கீதா ஜோரிக்கு உத்தரவிட்டது. ஆய்வு மேற்கொண்ட கீதா ஜோரி தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக 3 காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட 13 காவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 13 காவலர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையொட்டி 13 காவல் துறை அதிகாரிகளும் இன்று நீதி மன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்