காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Webdunia

வெள்ளி, 13 ஜூலை 2007 (18:59 IST)
காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவன் சரணடைந்தான்.

தெற்கு காஷ்மீர் அனந்த்னாக் மாவட்ட்த்தில் உள்ள தூரு பகுதிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சண்டையில் அப்பகுதி தீவிரவாத இயக்க குழுவின் தலைவன் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது தீவிரவாதி ஒருவன் சரணடைந்தான்.

அவனிடமிருந்து, இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகளை ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்