பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு!

Webdunia

வியாழன், 12 ஜூலை 2007 (16:54 IST)
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு நிபந்தனையுடன் ஓய்வு வயது வரம்பை தளர்த்த மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதல் தந்துள்ளது. எந்தெந்த பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த 3 நிதியாண்டுகளில் தொடர்ந்து நிகர லாபம் ஈட்டியுள்ளனவோ, அவைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தலாம் என்று மத்திய அமைச்சர்வை ஒப்புதல் தந்துள்ளது. அதனை நிர்ணயம் செய்ய அமைச்சர் தலைமையிலான உயர் அதிகார குழு ஒன்றை நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் எவை எல்லாம் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு பெற்று இயங்கி வருகின்றனவோ, அந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஓய்வு வயது உயர்வு கிடையாது என்று அமைச்சரவை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்