குஜராத்தில் 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia

திங்கள், 9 ஜூலை 2007 (16:40 IST)
நர்மாத ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் குஜராத் மாநிலத்தில் உள்ள 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நர்மதா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,பருச்,வதோரா,அஹமதாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதில் வதோரா,பருச் மாவட்டங்களில் உள்ள 72 கிராமங்கள் நர்மதா ஆற்றின் அருகில் அமைந்துள்ளன. கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக சதர் சவோவார் அணை நிரம்பியதால் பருச் மாவட்டத்தில் இருந்து 40,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்