குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு பரிசீலனை தொடங்கியது

Webdunia

திங்கள், 2 ஜூலை 2007 (13:16 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. பிரதீபா பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் கட்சி சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் பைரோன் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி, இன்று மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதுவரை 84 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதீபா பாட்டீல், ஷெகாவத் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்ப பெற ஜூலை 4ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்