செகாவத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் செகாவத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்