இந்த ஆண்டிலேயே எய்ட்ஸ் சட்டம்: அமைச்சர் அன்புமணி!

Webdunia

புதன், 13 ஜூன் 2007 (17:09 IST)
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பணியிடங்களிலும், பள்ளியிலும், மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார மையங்களிலும் தொற்று நோயாளிகளைப் போல ஒதுக்கி வைத்து நடத்துவதை தடை செய்ய வகை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் மத்திய அரசு நிறைவேற்றும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்!

ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் சட்ட வரைவு குறித்து எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் நடத்திவரும் அரசுசாரா தன்னார்வ இயக்கங்களுடன் பேசி வருவதாகவும், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோருக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு அரசுடன் விவாதித்து இந்த சட்ட வடிவத்தை உருவாக்கியுள்ளது. எய்ட்ஸ் உள்ளிட்ட கொடுமையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் உடல்நலப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்குவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது. (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்