கோவா : யாருக்கும் பெரும்பான்மை இல்லை! காங். அதிக இடம்!

Webdunia

செவ்வாய், 5 ஜூன் 2007 (16:41 IST)
கோவா மாநில சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாதிகள் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெறவில்லை!

கோவா சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ்-தேசியவாதிகள் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற சர்ச்சில் அலிமாவோவின் கோவா முன்னணி 2 இடங்களிலும், மஹாராஷ்ட்ரவாடி கோமந்தக் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்நத் முதலமைச்சர் பிரதாப் சிங் ரானேயின் மகன் விஷ்வஜித் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தனது ஆதரவு காங்கிரஸ் கூட்டணிக்கே என்று அவர் கூறியுள்ளதால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க மேலும் ஒரு சட்டப் பேரவை உறுப்பினரின் ஆதரவு இருந்தால் போதுமானதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்