பெட்ரோல், டீசல் விலைகள் உயராது-முரளி தியோரா!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வந்தாலும், இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார்.

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தக் கூடாது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து இருப்பதாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தியன் எண்ணை நிறுவனத்திற்கு மட்டும் தினமும் 85 கோடி நட்டம் ஏற்படுகிறது. மேலும், எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு கட்ட ரூ.2,412 கோடிக்கு பங்கு பத்திரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்