குஜராத் : பேருந்தில் தீ பிடித்ததில் 32 பேர் பலி!

குஜராத்தில் சாலை விபத்தில் சிக்கிய எரிவாயு லாரி தீப்பிடித்து எரிந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தும் எதிர்பாராதவிதமாக தீக்கிறையானது. இதில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்!

குஜராத்தில் எரிவாயுவை நிரப்பிக் கொண்டு வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் எரிவாயு லாரி கவிழ்ந்து தீப்பற்றியது.

எரிவாயு லாரி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த பயணிகள் பேருந்திலும் எதிர்பாராத விதமாக தீ பரவியது. பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பேர் உட்பட 32 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்