வானிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் மென்பொருள் கண்டுபிடிப்பு

சனி, 4 ஜனவரி 2014 (17:16 IST)
FILE
மழை, புயல், வெயில் ஆகியவற்றை சில மாதங்களுக்கு முன்கூட்டியே கணிக்கும் விதத்தில் மென்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் உள்ள தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இதைக் கண்டுபிடித்துள்ளார்.

மோக்ளிக் என்ற இந்த மென்பொருளின் மூலம் மழை, புயல், ஈரப்பதம், உலர்த்தன்மை என்று அனைத்தையும் கண்டுபிடிக்க முடியும். இந்த மென்பொருளின் மூலம் எந்த நாட்டிலும், எந்த மாநிலத்திலும் ஏற்படும் கால மாற்றங்களை முன்கூட்டியே கணக்கிட முடியும்.

மேலும், வானிலை நிலவரங்களையும், பயிர் விளைச்சல்களையும் கணக்கிட்டு கிராமப்புற பொருளாதார ஆய்வாளர்கள் கூட துல்லியமாக சொல்ல முடியும். பேரழிவுகள் மற்றும் புயல்கள் காரணமாக நாசமடைந்த பயிர்களின் அளவுகளையும் கணக்கிடலாம்.

அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுநர்கள், வானிலை ஆய்வாளர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், மாணவர்கள் என்று சமூகம் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பணியாற்றும் எந்த நபரும் சுலபமாக இந்த மென்பொருளை பயன்படுத்த முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்