4 பில்லியன் ஆண்டுகளாக சுருங்கும் புதன் கிரகம்

செவ்வாய், 18 மார்ச் 2014 (15:31 IST)
சூரியனுக்கு மிக அருகே இருக்கும் புதன் கிரகம் படிப்படியாக சுருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
FILE

அனைத்து கிரகங்களிலும் மிக சிறியதாக கருதப்படும் புதன், சூரியனுக்கு மிக அருகே இருக்கும் கிரகமாகும். சூரியனிலிருந்து சுமார் 36 மில்லயன் மைல்கள் தொலைவில் இருக்கும் இக்கிரகம் படிப்படியாக சுருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

1974 மற்றும் 1975 ஆம் ஆண்டு புதன் கிரகத்திற்கு மேல் நாசாவின் Mariner 10 விண்கலம், செலுத்தப்பட்டபோது அது எடுத்த புகைப்படத்திலேயே அக்கிரகம் சுருங்கியதற்கான ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாசாவின் MESSENGER விண்கலம் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு புதன் கிரகத்தை புகைப்படம் எடுத்ததில் அது படிப்படியாக சுருங்கி வருவது உறுதி செய்யப்பட்டது.
FILE

நாசாவின் Mariner 10 விண்கலம் புதனின் 45% பகுதியை மட்டுமே படமெடுத்ததாகவும், ஆனால், நாசாவின் MESSENGER விண்கலம் புதன் கிரகத்தை முற்றிலுமாக படமெடுத்ததில், புதனின் மேற்பரப்பு மெல்ல மெல்ல சுருங்கி அதன் பாகங்கள் நொறுங்கி சிதைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

மேலும், தற்போது புதனின் சுற்றளவில் 3 - 4.3 மைல்கள் சுருங்கியுள்ளதாகவும். இந்த நிகழ்வு சுமார் 4 பில்லியன் ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்