பணியாத வடகொரியா! எரிச்சலில் அமெரிக்கா!!

திங்கள், 29 ஏப்ரல் 2013 (12:51 IST)
FILE
தென்கொரியாவுடன் அமெரிக்கா இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; வடகொரியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும். இரண்டையும் செய்தபிறகு பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று வடகொரியா தனது நிலைப்பாட்டை இன்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

வடகொரியாவிலிருந்து வெளியாகும் Rodong Sinmun செய்தித்தாளில் வெளியிட்டுள்ள ராணுவ செய்திக் குறிப்பில், வடகொரியா அணுஆயுத சோதனைகளைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தங்கள் ஏற்கத்தக்க ஒன்றல்ல.

வடகொரியாவை அணுஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும். அணு ஆயுத நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனில் வடகொரியாவும் அணுஆயுத நாடாக அறிவிக்கப்பட்ட பிறகே சாத்தியப்படும். அதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் சாத்தியமில்லை என்று முகத்தில் அறைந்தாற்போல் வடகொரியா மீண்டும் தெளிவுபடுத்தி விட்டது.

வடகொரியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க முடியாது என்பதில் அமெரிக்காவும் உறுதியாக இருப்பதால் கொரிய தீபகற்பத்தில் போர்மேகங்கள் விரைவில் விலகாது என்றே தெரிகிறது. இருநாடுகளுமே முரண்டு பிடித்து வரும் நிலையில் சியோல்,பெய்ஜிங் மற்றும் டோக்கியோவு சுற்றுப்பயணம் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறைசெயலர் ஜான்கெர்ரி,வடகொரியா அணுஆயுத திட்டங்களைக் கைவிடுவதில் சீரியசாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

வடகொரியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க முடியாது என்பதில் அமெரிக்காவும் உறுதியாக இருப்பதால் கொரிய தீபகற்பத்தில் போர்மேகங்கள் எளிதில் விலகாது என்றே தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்