இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் தேவையற்றவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கையின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் உள்ளது. இலங்கையை நட்பு நாடு என்று கூறுவதை நிறுத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இலங்கையில் நிலவும் அமைதியான சூழலை குலைக்கிறது.
மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது என்றும், அவை வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.
இவை அனைத்தும் இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச் சாட்டுக்கள் ஆராய்ந்து பார்க்காமல் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்றும், தமிழக் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறுவது அர்த்தமற்றது என்றும் இலங்கை கூறியுள்ளது.