இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டு இறுதி வடிவம் பெற்றுள்ளது. இதில் இலங்கைக்கு ஆதரவாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அந்த அறிக்கையின் இறுதி வடிவம் ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டது. திருத்தப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு நாளை அல்லது அதற்கு மறுநாள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்தில் 113 பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.