கராச்சி வன்முறைக்கு 14 பேர் பலி

சனி, 15 ஜனவரி 2011 (15:03 IST)
கராச்சியில் அவாமி தேசியக் கட்சித் தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியால் அங்கு வன்முறை வெடித்தது. இதில் 14 பேர் பலியாகினர்.

அவாமி தேசியக் கட்சி மூத்தத் தலைவர் மீது நடந்த தாக்குதலையடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது.

குறிவைத்துக் கொல்லும் வன்முறையை கும்பல் ஒன்று கையாண்டு வருவதால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளனர்.

கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் அவாமி தேசியக் கட்சியும், முத்தாஹிதா குவாமி இயக்கமும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்