ஏமனில் படகு விபத்து: 80 பேர் பலி

செவ்வாய், 4 ஜனவரி 2011 (13:49 IST)
எத்தியோப்பா நாட்டை சேர்ந்தவர்கள் வந்துகொண்டிருந்த படகு ஒன்று ஏமனில் விபத்துக்குள்ளானதில் 80 பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் இரு படகுகளில் ஏமன் நாட்டுக்கு குடி பெயர்வதற்காக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தார்கள்.

இந்த இரு படகுகளும் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 80 பேர் வரை பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இருப்பினும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஏமன் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்