நைஜீரியாவில் ஆயுதக் கும்பலால் இந்திய ஆசிரியை கடத்தல்

வெள்ளி, 15 அக்டோபர் 2010 (13:08 IST)
நைஜீரியாவில் இந்திய ஆசிரியை ஒருவர் ஆயுதக் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள எகேத் என்ற இடத்தில் எண்ணை கிணறு நிறுவனம் ஒன்று பள்ளி ஒன்றை நடத்தி வருகிறது.

இதன் தலைமை ஆசிரியராக இந்திய பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் அந்தப்பகுதியில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக்களுடன் அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று, ஜீப் டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற காவலர் ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

பின்னர் அந்த தலைமை ஆசிரியையை கடத்தி சென்றனர். அவர் கதி என்னவென்று தெரியவில்லை. கடத்தியவர்கள் தீவிரவாதிகளா? அல்லது ஆயுதக்கும்பலா? என்று தெரியவில்லை.

அவரை மீட்க நைஜீரியா காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்