பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 25 பேர் பலி

ஞாயிறு, 25 அக்டோபர் 2009 (14:45 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று காலை அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத்தில் நீதித்துறை அமைச்சகம், குர்திஷ் அரசியல் கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று காலை பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

எனினும், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக பேச அனுமதி வழங்கப்படாத காரணத்தால் பலி எண்ணிக்கையை உறுதி செய்யாமல் காவல்துறையினர் செய்தியாளர்களை தவிர்க்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்