ராஜபக்ச ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை!

வெள்ளி, 24 ஜூலை 2009 (12:03 IST)
இலங்கையில் 2004ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், பிறகு 2005ஆம் ஆண்டில் அதிபராகவும் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டில் இயங்கிவரும் ‘ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்துலக ஒலிபரப்புககூட்டத்தாபனத்தின் தமிழ் வானொலியின் மட்டக்களப்புச் செய்தியாளர் ஜி.நடேசன் 2004ஆம் ஆண்டமே மாதம் 31ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இதுவரை தர்மரட்ணம் சிவராம், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி உட்பட 34 ஊடகவியலாளர்கள் படுகொலசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பட்டியலவெளியிட்டுள்ள இந்த அமைப்பு, 34 பேரில் 30 பேர் தமிழர்கள் எனவும், மூவரசிங்களவர்கள் என்றும் மற்றொருவர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றுமசுட்டிக்காட்டியுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்களதவிர, மேலும் பல ஊடகவியலாளர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள், துணைப்படைக் குழுக்களால் தாக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் இருப்பதுடன், மேலுமபல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சண்டே டைம்ஸ் (Sunday Times) பத்திரிகையின் எழுத்தாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயகமமற்றும் யசிகரன், அவரதமனைவி வளர்மதி போன்றவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு, ஒரவருடத்திற்கும் மேலாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசுக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள், மற்றும் பலரை இணைத்தஐரோப்பாவைத் தளமாகக் கொண்டு இந்த “இலங்கையின் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு” இயங்கி வருகின்றது.

இவ்வமைப்பு அளித்துள்ள கொல்லப்பட்ஊடகவியலாளர்களின் விவரங்கள்:
2004
1. அய்யாத்துரை நடேசனஊடகவியலாளர் மே 31
2. கந்தசுவாமி ஐயரபாலநடராஜ் எழுத்தாளர் ஆகஸ்ட் 16
3. லங்கா ஜயசுந்தபுகைப்பட ஊடகவியலாளர் டிசம்பர் 11
2005
4. தர்மரட்ணம் சிவராமஆசிரியர் ஏப்ரல் 28
5. கண்ணமுத்து அரசகுமாரஊடகப்பணியாளர் ஜுன் 29
6. ரேலங்கி செல்வராஜஊடகவியலாளர் ஆகஸ்ட் 12
7. டீ.செல்வரட்ணமஊடகப்பணியாளர் ஆகஸ்ட் 29
8. யோககுமாரகிருஷ்ணபிள்ளை ஊடகப்பணியாளர் செப்டம்பர் 30
9. எல்.எம்.பளீல் (நற்பிட்டிமுனை பளீல்) எழுத்தாளர் டிசம்பர் 02
10. கே.நவரட்ணமஊடகப்பணியாளர் டிசம்பர் 22
2006
11. சுப்ரமணியமசுகிர்தராஜன் ஊடகவியலாளர் ஜனவரி 24
12. எஸ்.ஆர்.கணநாதனஉரிமையாளர் பிப்ரவரி 01
13. பஸ்ரின் ஜோர்ஜசகாயதாஸ் ஊடகப்பணியாளர் மே 03
14. ராஜரட்ணமரஞ்சித்குமார் ஊடகப்பணியாளர் மே 03
15. சம்பத் லக்மால் டி சில்வா ஊடகவியலாளர் ஜுலை 02
16. மரியதாசன் மனோஜன்ராஜஊடகப்பணியாளர் ஆகஸ்ட் 01
17. பத்மநாதனவிஸ்மானந்தன் பாடகர்இ இசையமைப்பாளர் ஆகஸ்ட் 02
18. சதாசிவம் பாஸ்கரனஊடகப்பணியாளர் ஆகஸ்ட் 15
19. சின்னத்தம்பி சிவமகாராசா ஊடக உரிமையாளர் ஆகஸ்ட் 20
2007
20. எஸ்.ரவீந்திரனஊடகப்பணியாளர் பிப்ரவரி 12
21. சுப்ரமணியமஇராமச்சந்திரன் ஊடகப்பணியாளர் பிப்ரவரி 15
22. சந்திரபோஸ் சுதாகரஊடகப்பணியாளா ஏப்ரல் 16
23. செல்வராசா ரஜிவர்மனஊடகவியலாளர் ஏப்ரல் 29
24. சகாதேவன் நிலக்ஸனஊடகவியலாளர் ஆகஸ்ட் 01
25. அந்தோனிப்பிள்ளசெரின் சித்தராஞ்சன் ஊடகவியலாளன் நவம்பர் 05
26. வடிவேல் நிமலராஜஊடகப்பணியாளர் நவம்பர் 17
27. இசைவிழி செம்பியன் (சுபாஜினி) ஊடகவியலாளர் நவம்பர் 27
28. சுரேஸ் லிம்பியஊடகப்பணியாளர் நவம்பர் 27
29.ஆர்.தர்மலிங்கமஊடகப்பணியாளர் நவம்பர் 27
2008
30. பரநிருபசிங்கமதேவகுமார் ஊடகவியலாளர் மே 28
31. ராஷ்மி முஹமடஊடகவியலாளர் அக்டோபர் 06
2009
32. லசந்த விக்ரமதுங்ஆசிரியர் ஜனவரி 08
33. புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஊடகவியலாளர் பிப்ரவரி 12
34. சசி மதனஊடகப்பணியாளர் மார்ச் 06

வெப்துனியாவைப் படிக்கவும்