ஹிலாரியின் பயணத்தால் இந்திய-அமெரிக்க நட்புறவு வலுவடையும்: மீரா ஷங்கர்

செவ்வாய், 14 ஜூலை 2009 (16:06 IST)
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் இந்திய சுற்றுப்பயணத்தால், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர்
மீரா ஷங்கர் கூறியுள்ளார்

கலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ நகரில் நடந்த உலக விவகாரக் கூட்டமைப்பில் கலந்துக்கொண்டு பேசிய மீரா ஷங்கர், கடந்த காலங்களில் இந்தியா-அமெரிக்கா நாடுகள் இடையேயான உறவு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாக குறிப்பிட்டார்.

இந்தியா தேசிய அளவிலான வளர்ச்சிகளை பெற அமெரிக்கவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், ஹிலாரியின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கு இடையான உறவு வரும்காலங்களில் மேலும் வலுவடைவதற்கும், பல திட்டங்கள் செயல்வடிவம் பெறவும் உதவும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்