இந்தோனேஷியாவில் மிதமான நிலநடுக்கம்

ஞாயிறு, 12 ஜூலை 2009 (12:48 IST)
இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாவட்டம் கைமானா என்ற இடத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகி உள்ளது.

அந்நாட்டின் அரு தீவுப் பகுதியில் உள்ள டோபோவில் இருந்து 85 கி.மீ தூரத்தில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை 8.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கதால், நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்