இனவெறி இருப்பது உண்மைதான் : ஆஸ்ட்ரேலியர்கள் ஒப்புதல்
புதன், 24 ஜூன் 2009 (15:49 IST)
தங்கள் நாட்டு இனவெறி இருப்பது உண்மைதான் என்று 85 விழுக்காடு ஆஸ்ட்ரேலியர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆஸ்ட்ரேலிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 11 ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 16,000 க்கும் அதிகமான ஆஸ்ட்ரேலியர்களிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதில் 85 விழுக்காடு பேர், ஆஸ்ட்ரேலியாவில் இனவெறி இருப்பதை தாங்கள் உணர்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
40 விழுக்காடு பேர், கலாச்சார வேறுபாடுகள் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறியுள்ளனர்.இந்தியர்கள் மீது சமீபகாலமாக நடத்தப்படும் தாக்குதல்கள் இதற்கு உதாரணமாக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தகவலை சிட்னி பல்கலைக்கழகம் ஒன்றின் சமூக அறிவியல் துறை பேராசிரியர் ஒருவர் தெரிவித்ததாக ' ஹெரால்டு சன் ' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.