சீனா: நிலக்கரி சுரங்க விபத்தில் 18 பேர் பலி

ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (11:02 IST)
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் ஹுனன் மாகாணத்தில் உள்ள சென்சுவோ நகரில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில், வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் எதிர்பாராத விதமாக நேற்று மதியம் வெடித்ததாக நிலக்கரி தொழிற்சாலை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் இதுவரை 18 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலக்கரி சுரங்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெடி பொருட்கள் பதுக்கி வைத்ததே விபத்திற்கு காரணம் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்தின் போது சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 2 நபர்கள் குறித்து தகவல் இல்லாததால் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்