முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகள் தாக்குதல்: 15 கடற்படையினர் பலி

திங்கள், 9 பிப்ரவரி 2009 (10:57 IST)
முல்லைத்தீவில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் சூப்பர் டோரா மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் நேற்று (ஞாயிறு) காலை 5.30 மணி முதல் 6 மணி வரை சிறிலங்கா கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதிலகடற்படையினரின் சூப்பர் டோரா கப்பல் கடல்புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த 15 சிறிலங்கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரின் மற்றொரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இம்மோதலில் கடற்புலிகள் நால்வரும் கடற்கரும்புலிகள் இருவரும் வீரச்சாவடைந்துள்ளனர் என புதினம் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்