10 ஆயிரம் பேர் வெளியேறினர் - சிறிலங்க ராணுவம்

ஞாயிறு, 8 பிப்ரவரி 2009 (14:44 IST)
இலங்கையில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்குப் பகுதியில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறி இருப்பதாக சிறிலங்க ராணுவ உயர் அதிகாரி உதய நாணயக்கரா தெரிவித்துள்ளார்.

என்றாலும் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழிப்பதில் ராணுவப்படையினர் தீவிரமாக உள்ளதாகவும் அவர் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக ராணுவத்தினர் நடத்திவரும் அதிரடி நடவடிக்கைகளில் ஏறக்குறைய விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கியிருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து ஐ.நா வும், கொடை வழங்கும் நிறுவனங்களும் கவலை வெளியிட்டுள்ளன.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து 5 ஆயிரம் பேர் வெள்ளியன்று வெளியேறியதாகவும், வேறு 5,600 பேர் சனிக்கிழமையன்று வெளியேறியதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்