அமெரிக்க வாழ் இந்தியருக்கு வெள்ளை மாளிகைப் பதவி

சனி, 7 பிப்ரவரி 2009 (12:59 IST)
வெள்ளை மாளிகையில் உருவாக்கப்பட்டுள்ள 15 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் அமெரிக்க வாழ் இந்தியரான நிக்கோலஸ் ரதோட் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க அரசின் உள்விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கான 15 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை உருவாக்கினார். இக்குழு அரசுக்கான புதிய திட்டங்களை வகுப்பது, ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

இந்நிலையில், இக்குழுவில் இடம்பெற்றிருந்த அமெரிக்க வாழ் இந்தியரான நிக்கோலஸ் ரத்தோடுக்கு உள்விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருடன் ஜோடிஜில்லெட், மைக்கேல் பிளேக் ஆகியோரும் இணைந்து செயல்பட உள்ளனர்.

இதுகுறித்து அதிபர் ஒபாமா கூறுகையில் ஜோடி, மைக்கேல், நிக்கோலஸ் ரத்தோட் ஆகிய மூவரும் இக்குழுவின் சிறந்த உறுப்பினர்கள். மக்களுக்கு சேவையளிப்பதற்கான அரசின் செயல்பாடுகளில் இக்குழு தனது அனுபவத்தை வெளிப்படுத்தி எனக்கு ஆலோசனை வழங்கும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்