எறிகணை, பீரங்கித் தாக்குதல்: இலங்கையில் 44 பொதுமக்கள் பலி

வெள்ளி, 30 ஜனவரி 2009 (11:13 IST)
சிறிலங்க அரசு அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணை, பீரங்கித் தாக்குதலில் 44 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும் 178 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, மாணிக்கபுரம், சுதந்திரபுரம், இருட்டுமடு, றெட்பானா மற்றும் மூங்கிலாறு உள்ளிட்ட பல பகுதிகளின் மீது சிறிலங்கா படையினர் நேற்று எறிகணை, பீரங்கித் தாக்குதல் நடத்தினர்.

இதில், சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேரும், சுதந்திரபுரம் அந்தோணியார் கோயில் பகுதியில் 5 பேரும், வீதியோரங்களில் 13 பேரும், மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளதாக புதினம் இணையதளம் தெரிவித்துள்ளது.

சுதந்திரபுரம் அந்தோனியார் கோவிலுக்கு அருகில் சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலில் 17க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பிற பகுதியில் படையினரின் தாக்குதலுக்கு 161 பேர் காயமடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்