யு.எஸ். ஏவுகணைத் தாக்குதல்: பாகிஸ்தானில் 15 பேர் பலி
சனி, 24 ஜனவரி 2009 (15:13 IST)
மிரன்ஷா: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்தியதாகக் கருதப்பட்டும் ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள், 4 பொதுமக்கள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற பின்னர் அல்-கய்டாவின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகக் கருதப்படும் வசிரிஸ்தானில் முதன் முறையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு வசிரிஸ்தானின் மிர்-அலி பகுதியில் ஆளில்லா உளவு விமானம் வீசிய ராக்கெட் குண்டுகளுக்கு 8 பேர் பலியானதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில மணி நேரத்திலேயே தெற்கு வசிரிஸ்தானில் உள்ள வானா பகுதியில் வீசப்பட்ட 2 ராக்கெட் குண்டுகளுக்கு மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் குழந்தைகள்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள அல்-கய்டா, தாலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது. முஷாரஃப் கண்டனம் : இதற்கிடையில், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.